தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட அலுவலகம் உயர் கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுவாமி குமார் வெள்ளிமலை மற்றும் சுவாமி R.சுந்தரேஸ்வரர்அவர்கள் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள 60 கிராமங்களின் ம பழங்குடி குறும்பர் இன மக்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட அளவில் அமைப்பு உருவாக்கியும், அதன் மூலமாக செயற்குழு, மாவட்ட மற்றும் ஒன்றியக்குழு ஆலோசனை மூலமாக மாவட்டம் ஒன்றியம் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாவட்ட அமைப்பு மூலம் இளைஞர் அணி மகளிர் அணி மற்றும் அறக்கட்டளை உருவாக்கவும் இனத்தின் வளர்ச்சி ஏற்படுத்தவும் அரசியலில் நமது பங்கு சம்பந்தமாகவும் பழங்குடி சான்றிதழ் பெறுவது சம்பந்தமாகவும் அகடாமி கல்வி சேவை மூலமாக தேனி மாவட்ட அலுவலகம் அமைத்து மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து பழங்குடியினர் சான்றிதழ் பெறவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 10-வது, பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் 100 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது
இந்தக் கூட்டத்தில் மணிவண்ணன் ஒருங்கிணைப்பாளர், சஞ்சீவிராம், முத்துராமன், MGM குரும்பன், தமிழ்நாடு அனைத்து பழங்குடிகள் பேரியக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஆதிவாசி முருகன் உள்ளிட்டோர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கூட்டத்தில் சிறப்பித்து வேல்பாண்டி குறுமன்ஸ் அவர்கள் நன்றியுரை கூறி சிறப்பித்தார்கள்.




