120 ஆண்டுகள் மிகப் பழமையான புதுக்கோட்டை திரு இருதயம் ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்.
இன்று உலகம் முழுவதும் கிருத்துவ மக்களின் மிக முக்கியமான பண்டிகையான கிறிஸ்மஸ் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்..

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டபுரத்தில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இயேசு பிறப்பு. நிகழ்ச்சியை கண்டு கிறிஸ்மஸ் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு திரு இருதய ஆண்டவர் ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
குழந்தை இயேசு பிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அழகிய குடில்கள் அமைக்கப்பட்டு, அதில் குழந்தை இயேசு சொரூபம் அங்கு வைக்கப்பட்டிருந்தது…
இயேசு பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரு இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை சவரிநாயகம். தலைமையிலான பங்குத் தந்தைகள் பங்கு பெற்றனர்.
இயேசு பிறப்பு பற்றிய சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்று வரும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு இயேசு பிறப்பை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் ….
இயேசு கிறிஸ்து பிறந்தநாளான கிறிஸ்மஸ் உலகெங்கும் இன்று கிறிஸ்தவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். அன்பு, கருணை, சகோதரத்துவத்தை போதித்த இயேசுவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.




