• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

2026 தேர்தலில் திமுக பல் பிடுங்கப்படும்..,

செவிலியர்கள் கொந்தளிப்பு. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டம்நடத்தி வரும் நிலையில் விருதுநகர் மாவட்டதில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை வாசலில் கடந்த ஏழு நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள்,கூறுகையில், ஸ்டாலின் கடந்த தேர்தல் வாக்குறுதியில் 356 வது வாக்குறுதியாக செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறினார். ஆனால் எட்டு வருடங்களாக பணி செய்து வரும் எங்களை பல போராட்டங்கள் நடத்தியும் எங்களை ஏமாற்றி வருகிறார்.

வரும் 2026 தேர்தலில் மொத்தம் 8 ஆயிரம் பேர் (2021 வரை கணக்கின் படி)கொண்ட செவிலியர்கள் மற்றும் எங்கள் உறவினர்கள், நண்பர்கள்அனைவரும் சேர்ந்து திமுக வின் பல்லை புதுங்குவோம் என்று கொந்தளித்தனர்.