• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெண்ணின் சொத்துக்களை அபகரித்த தாய்மாமா..,

BySubeshchandrabose

Dec 23, 2025

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா தேவி (42) இவரின் தந்தை ஓய்வு பெற்ற தாசில்தார் மற்றும் தாய் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது கணவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டு தனியாக சென்று விட்டார்.

இதனால் ஆதரவின்றி வசித்து வந்த கோகிலாவை அவரின் தாய்மாமா ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் பார்த்து வந்தனர்

இந்த நிலையில் கோகிலாவின் பெயரில் உள்ள 16 ஏக்கர் தென்னந்தோப்பை விற்று அந்த பணத்தில் வீடு கட்டி மாத வருமானத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி 95 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து அந்த பணத்தை தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதாக கூறி ராஜ்குமார் வைத்துக் கொண்டார்

ஒரு வருடங்களாக மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு செல்லும் ராஜ்குமார் மேலும் கோகிலா தேவிக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் கேட்டு தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது

மேலும் கோகிலா தேவியின் பெயரில் அவரது தந்தை பிஎஃப் பணம், தாயின் பென்ஷன் பணம், மற்றும் இன்சூரன்ஸ் என மொத்தம் 58 லட்சம் ரூபாய் வங்கியில் இருந்த நிலையில் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கோகிலா தேவியை மிரட்டி காசோலையில் கையெழுத்து பெற்று பணத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது

இது குறித்து தேனி உதவு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கோகிலா தேவி புகார் தெரிவித்த நிலையில் தற்போது வரை தனது பணத்தை மீட்டு தர போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார்

இந்த நிலையில் தனது மருத்துவ தேவைக்கு கூட பணம் இன்றி சிரமப்பட்டு வருவதாகவும் தன்னை ஏமாற்றி தன் பணத்தை அபகரித்த ராஜ்குமார் அவரது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட கோகிலா தேவி தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.