• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

BySubeshchandrabose

Dec 23, 2025

தேனி அருகே வீரபாண்டில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF), மாவட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த இயற்கைப் பேரிடர் மீட்பு விழிப்புணர்வை நடத்தினர்.

விபத்து பாதிப்பு போன்ற ஆபத்தான காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து செய்து காட்டினர்.

மேலும் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது அங்கு நிலச்சரிவிலும், கட்டுமானங்களுக்கு மேலும் சிக்கித் தவித்த பொதுமக்களை எப்படி காப்பாற்றினோம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு செயல்முறை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி சுமார் 30க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கலந்துகொண்டு அவர்களுக்கு உதவியாக மாவட்ட தீயணைப்புத் துறையினர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்

வயநாடு பேரிடர் மீட்பு சம்பவத்தை கண்முன்னே செயல் வடிவில் காட்டியதால் ஆச்சரியத்துடன் மாணவர்கள் பார்த்து விழிப்புணர்வு அடைந்தனர்.