• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

புர்ஜ் கலிஃபாவில் ரன்வீர் சிங்கின் “83” திரைப்பட வீடியோ

Byகாயத்ரி

Dec 17, 2021

பாலிவுட்டின் அசத்தல் ரியல் லைப் ஜோடி ரன்வீர் சிங்,தீபிகா படுகோனே.ரன்வீர் சிங் ,ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம் தாயாராகி உள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

இதனை மையமாக வைத்தும் கபில்தேவின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டும் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ரோலில் தமிழ் நடிகர் ஜீவாவும், கபில் தேவாக நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதில் கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரன்வீர் சிங் தீபிகா படுகோனே இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இந்தப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படம் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட ரிலீசை முன்னிட்டு படத்தை விளம்பரபடுத்த படக்குழு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ’83’ படத்தின் டிரெய்லர் வீடியோ தொகுப்பை துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இடம்பெறச் செய்துள்ளது 83 பட தயாரிப்பு நிறுவனம். இந்த உலகின் உயரமான கட்டிடத்தில் ரன்வீர் சிங் உருவத்தோடு வீடியோ ஒளிபரப்பானது. இந்த நிகழ்வில் ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோனுடன் கலந்து கொண்டார்.