ஒரு அரசானது மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும்.இந்த மக்களுக்காக செயல்பட வேண்டும் என்று மக்கள் வாக்களித்து ஒரு அரசு உருவாகிறது.அப்படி இருக்க அரசு அதிகாரிகளுக்கும் இது பொருந்தும், ஆம் அரசு அதிகாரிகளின் சம்பளம் மக்கள் கொடுக்கும் வரி பணத்தில் இருந்து தான் கொடுக்கபடுகிறது.
அவர்களுக்காக தான் இவர்கள் வேலை பார்க்கின்றனர். இப்படி இருக்க ஒரு குறை , பிரச்சனை என்று போனால் அதற்கு தீர்வு அளிக்க வேண்டிய அதிகாரிகள் அதற்கு அலட்சியமாக பதில் அளிப்பது. இன்று போய் நாளை வா என்று கீதா உபதேசம்செய்வது, உங்க ஒருத்தர் பிரச்சனையை தான் நாங்கள் பார்க்க வேண்டுமா ? என்று எகிறுவது.
ஆம் 9 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படாமல் அலைக்கழிக்கும்அவல நிலை தமிழகத்தில் உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புகல்லூரி கோட்டூரில் செயல்பட்டு வந்தது.பின்னர் அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் பணி புரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 9 மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை.
இதற்காக பத்து மாதங்களுக்கு மேலாக அரசு அலுவலங்களுக்கு நடையாய் நடந்தும் எந்த வித நடவடிக்கையும் இது வரை எடுக்க வில்லை என்று தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த போது கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கபட்டவர்கள் யு ஜி சி கல்வி தகுதியை காரணம் காட்டி இதற்கு முன்னாள் இருந்த கல்லூரி முதல்வர் சம்பளத்தை நிறுத்துகிறார்.
இது குறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கேட்ட போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்ற யுஜிசி தகுதி பெறாத ஆசிரியர்கள் யுஜிசி தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,அதற்கு அரசு கால அவகாசம் கொடுத்துள்ளது என்றும் காலம் தாழ்த்தி கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்த அறிவிப்பு முன்னரே வந்துள்ளது என்பதை முன்னாள் கல்லூரி முதல்வர் திட்டமிட்டு மறைத்துள்ளார். இது குறித்து கேட்ட போதும் முறையாக அவர் பதில் அளிக்க வில்லை.இது குறித்து அமைச்சரிடம் சென்று பணி செய்யலாம் என்று என்று கடிதம் பெறப்பட்டும் அதற்கும் முறையான நடவடிக்கை இல்லை. மேலும் இந்த புகார் குறித்து மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனரிடம் தெரிவித்த போதும் நிரந்தர பணி கேட்டு போராட்டம் செய்கிறீர்களா என்று மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.
இந்த கல்வித்தகுதி இல்லாதவர்கள் 1450 பேர் தமிழகத்தில் மற்ற கல்லூரிகளில் பணி புரிந்து கொண்டு தான் இருகின்றனர். அவர்கள் அனைவரும் பணி புரியும் போது இவர்கள் மட்டும் ஏன்பணியில் இருந்து நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் இங்கு எழும் பெரிய கேள்வி.
இப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டே இந்த விஷயத்தை கிடப்பில் போட்டுள்ளனர் பல மாதங்களாக, இதில் கல்லூரியில் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.அதனை நம்பி பணி புரிந்த கவுரவ விரிவுரையாளர்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது.
இப்படி எல்லாம் அநிநியாமா பேசுறாங்க என்று உயர்கல்வித்துறையில் உள்ள அதிகாரியிடம் பேசினால் என்ன சார் டெய்லி போன் பண்ணி தொந்தரவு பண்றீங்க உங்கள் ஒரு ஆள் பிரச்சனை தான் நாங்க பார்க்கனுமா என்று சலிப்பாக கூறிவிட்டு போன்கட் செய்து விடுகிறார்.
இவர்களுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழகம் கூறுகிறது. அதற்கு ஆவணங்கள் கேட்டால் கல்லூரி நிர்வாகம் தர மறுக்கிறது.அதிகாரிகளிடம் அணுகினால் இப்படி சலிப்பாக பதில் கூறுகின்றனர். அரசை நம்பும் மக்கள் நிலை இது தானா இதற்கு அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்.