2026 சட்டமன்ற தேர்தலில், பட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து, அக்கட்சியின் தலைமை அலுவலகம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர், தாங்கள் போட்டியிட விருப்பம் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், செங்கல்பட்ட மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான தாம்பரம் விநாயகம் , திருப்போரூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள்
சேலையூர் சங்கர் பாலசுப்ரமணியம் RS. மணி கராத்தே சந்தானம் பாலாஜி
கோ சி வாசன் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் சென்று, விருப்ப மனு அளித்தார்.




