புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சென்ற மாதம் டிட்வா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக புதுச்சேரி அரசு மழையால் பாதித்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மழையால் பாதித்த அனைத்து குடும்ப ரேஷன் அட்டைகளுக்கும் ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




