மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எதிரே இன்னும் 10 தினங்களில் திமுக சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், திமுக துணை பொதுச் செயலாளரான கனிமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.,

இதற்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், கனிமொழியின் ஆதரவாளரான இளமகிழன் தலைமையில் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.,

இதனிடையே கல்லூரி முன்பும் சீர் செய்யும் பணிகளை செய்த திமுக நிர்வாகிகள் மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த வேம்பு மற்றும் புங்க மரம் என 50 ஆண்டு பழமையான மூன்று மரங்கள், ஓர் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றியதோடு, அதை தனியார் மர அறுவை மில்-க்கு விற்பனை செய்து லாபம் ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
அனுமதியின்றி மரங்களை அகற்றியது, விற்பனை செய்தது தொடர்பாக உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,




