கோவை: தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.
தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை கோவை மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் தமிழ் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழாவை முன்னிட்டு தமிழ் மொழி குறித்தும் பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். சில மாணவ மாணவிகள் தமிழ் தாய், பாரதியார் அம்பேத்கர் ஆகியோரது வேடங்களை அணிந்த வண்ணம் பேரணி மேற்கொண்டனர். முன்னதாக பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.




