• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பூட்டிய வீட்டில் தீ விபத்து 65 வயது முதியவர் சடலமாக மீட்பு ..,

ByRadhakrishnan Thangaraj

Dec 17, 2025

விருதுநகர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில் தேவரத்தினம் மகன் தேவகிரி வயது 65 இவர் திருமணமாகி மனைவியை கடந்த 30 ஆண்டு காலுக்கு முன்பை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இவருக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 4. மணி அளவில் அவரது வீட்டில் தீ பிடித்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அடுத்து விரைந்து வந்த இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயனைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக பூட்டி இருந்த நிலையில் சந்தேகம் அடைந்த போலீசார் பின்பக்க வாசல் வழியாக சென்று ஜன்னலை உடைத்து உள்ளே சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பொழுது ஒருவர் உள்ளே அலரும் சத்தம் கேட்டு ஜன்னலை முழுவதுமாக உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது தேவகிரி உடம்பில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் தீயை அணைத்து உள்ளே சென்று தீயணைப்பு வீரர்கள் பார்த்த பொழுது தேவகிரி உயிரிழந்ததை தெரிய வந்தது. உடலை மீட்ட போலீசார் பிரத பரிசோதனைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

சிறுவயதிலேயே மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த தேவகிரி தனது தகப்பனார் தேவரத்தினம் நடைத்தி வந்த ஜவுளிக்கடையை கடந்த பத்தாண்டுக்கு முன்பு விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தை வைத்து தன் வாழ்வாதாரத்தை கழித்து வந்ததாக கூறப்படுகிறது மனவிரக்தியில் இருந்தவர் வீட்டிற்கு தீ வைத்துக் கொண்டு சொத்துக்களை சேதப்படுத்திவிட்டு தானும் இறந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தீ வைத்துக் கொண்டாரா என்ற கோணத்தில் சம்பவ இடத்திற்கு வந்த இராஜபாளையம் டி எஸ் பி பஷினா பீபி. வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக் பாபு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.