• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாஜகவில் இணையும் நிகழ்ச்சி..,

BySubeshchandrabose

Dec 16, 2025

தேனியில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டார்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராம சீனிவாசன் கூறும்போது

கேரளா மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இதன் மூலம் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது

பாமகவில் உட்கட்சி சிக்கல் இருப்பதால் தற்போது அதில் கவனம் செலுத்தி வருகின்றனர், தேமுதிக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி அறிவிப்பார்கள் அவர்கள் ஒவ்வொரு முறையும் திமுகவிற்கு எதிராக தான் பேசி வருகிறார்கள் என்.டி.ஏ கூட்டணியில் பாமக, தேமுதிக விரைவில் இணையும்

திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக அனைவரும் என்.டி.ஏ கூட்டணியில் வரவேண்டும் திமுகவிற்கு சாதகமான முடிவுகளை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் எடுக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன்

திமுக மக்களுக்கு எதிரான கட்சி, தமிழக வளர்ச்சிக்கு எதிரான கட்சி, இந்துக்களுக்கு எதிரான கட்சி எனவே திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் எங்களது தேர்தல் வியூகம் என தெரிவித்தார்

மேலும் பேசிய அவர் கலைஞர் உயிரிழந்த போது மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்தீர்கள் அப்போது எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு சென்று இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மட்டும் எங்களுக்கு 30 நாள் மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது என கூறி தீபத்தை ஏற்று விடாமல் செய்தீர்கள் இதில் என்ன நியாயம் உள்ளது என்று பேசிய அவர்

சட்டமன்றத் தேர்தலில் முருகன் மீது சத்தியமாக திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம், இது தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களின் உரிமை, முருக பக்தர்களின் வலி இதனை வலியுறுத்தி தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார்.