சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்,காமராஜர் சாலையில் 50,வருடம் பழைமை வாய்ந்த ஸ்ரீ தேவி கங்கையம்மன் கோவில் உள்ளது,நேற்று இரவு வழக்கம் போல் கோவிலை மூடிவிட்டு சென்ற அர்ச்சகர் இன்று காலை வந்து பார்த்த போது முன்பக்க கதவை உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கபட்டு ஆறு மாதமாக இருந்த 40,000 ரூபாய் வரை உள்ள பணத்தை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரியவந்தது,

அதே போல் தாம்பரம் அடுத்த முடிச்சூர் பாலாஜி நகரில் உள்ள பிரசத்தி பெற்ற ஸ்ரீ ஆதிசக்தி துலுகாத்தம்மன் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து 3 மாத காணிக்கை சுமார் 40,000. ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்,


சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேலையூர் மற்றும் பீர்கன்காரனை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்,
ஒரே இரவில் இரண்டு பிரசத்தி பெற்ற கோவில்களில் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




