மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் குடிப்பதற்கும்,சமைப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது.

இது பற்றி கேசம்பட்டி ஊராட்சி செயலரிடம் கூறியும் தண்ணீர் வருவதற்கு சரியான நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!





