முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை மீது உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் பாஜகவினர் இந்து அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை இதனால் பாஜகவினர், இந்து முன்னணியினர், திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆறு நாட்களாக பக்தர்களுக்கு மலை மீது செல்ல அனுமதி மறுக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு,பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.


இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறி கும்பலா? “காக்க காக்க தமிழ்நாட்டை காக்க விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட” என கோவில், மசூதி, சர்ச், வேல் புகைப்படத்துடன் போராடுவோம் வெல்வோம் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.




