• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஓ.பன்னீர்செல்வம் – அண்ணாமலை திடீர் சந்திப்பு !!!

BySeenu

Dec 8, 2025

கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

அப்போது திருமண வீட்டில் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில்,  பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் அவரை அழைத்து பேசுவதும்,  தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள்  அவரை சந்தித்து பேசுவதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில்  ஓ. பன்னீர்செல்வத்தை -சந்தித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்து உள்ளார்.