நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் அருகில் பாபர் மசூதி இடிப்பு தினம் எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தினை துக்க தினமாக அனுசரித்தும் வழிபாட்டுத் தலங்கள் உரிமையை காக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எஸ்டிபி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


கடந்த 92 ஆம் ஆண்டு டிசம்பர் அன்று அயோத்தியில் ராமர் மசூதி இடிப்பு நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மக்கள் டிசம்பர் 6 ஆம் தியதி இதனை தொடர்ந்து வருடம் தோறும் இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபான்மையின் பாதுகாப்பு வழிபாட்டு உரிமை சட்டத்தின் ஆட்சி ஜனநாயகம் மதசார்பின்மை ஆகிய அனைத்தும் ஒருசேர தரை தரைமட்டமாகப்படடு உள்ளது எனினும் அந்த அநீதிக்கு நீதி என்பது கிடைக்கவில்லை, என்பதை வலியுறுத்தியும் சிறுபான்மையின் பாதுகாப்பு என்பது வெறும் சட்டப்பிரிவுகள் அல்ல அது இந்திய தேசத்தின் அடித்தளம் என்பதை உணரும் வகையிலும் அதை தகர்த்தால் இந்தியா என்ற கட்டமைப்பை சிதறிவிடும்.
எனவே அதனை காற்றிட வேண்டும் என்றும். வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




