தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த தின விழாவை பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகளுடன் லட்டு கொடுத்து பட்டாசு வெடித்து தேனி வடக்கு ஒன்றிய திமுகவினர் கொண்டாடினர்.

தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிப்பட்டியில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம். பி . ஆலோசனைப்படி தேனி வடக்கு ஒன்றியம் பழனிசெட்டிபட்டி பேரூரில் தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் வாசகன் ஏற்பாட்டில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும்,பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் உடன் தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபாகர், தேனி வடக்கு மாவட்ட ஓட்டுனர் அணி துணைத் தலைவர் கருப்பசாமி ,கழக வழக்கறிஞர் கண்ணதாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஹரி, கௌதம், மோகன், சுதாகர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.









