மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை பெருங்கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜீ.சூர்யா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வந்த மாநில தலைவர் சூர்யாவிற்கு மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் சார்பில் சார்பில் கிரைன் மூலம் மாலை, செண்ட மேளம், போய் கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைகளுடன் வழிநெடுகிழும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜீ.சூர்யா.,
சிவகங்கையில் பேருந்து விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்., உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம் என முதல்வர் அறிவித்து இருக்கிறார்., கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் அறிவித்த அதே முதல்வர்தான் அரசு பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 3 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இது போன்ற கோர விபத்துகளுக்கு ஒரே மாதிரியான நிவாரண தொகை வழங்க வேண்டும் என அறிவித்து இருந்தது., அதை மீறி இவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல நிவாரண தொகை வழங்கி வருவதை பாஜக வன்மையாக கண்டிகிறது.
அதே போன்று அண்டை மாநிலங்களில் உள்ளது போல அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் நடைமுறையால் இன்சூரன்ஸ் நிறுவனம் விபத்து ஏற்பட்டால் அதற்கான பாதிப்பு தொகையை வழங்கி வருகிறது., தமிழகம் சிறந்த மாநிலம் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இது போன்ற எந்த இன்சூரன்ஸ் திட்டமும் இல்லாமல் மக்களை அரசு பேருந்துகளில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் நடந்த ஆய்வின் படி தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளில் 65% பேருந்துகள் காலாவதியான பேருந்துகள் என்றும் அதை புதுப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
இது போன்ற அடிப்படை விஷயங்களில் கவணம் செலுத்தாமல் தமிழக மக்களின் உயிர்களில் ஏழை மக்களின் உயிர்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விளையாடி கொண்டே வருபதை தமிழக பாஜக வன்மையாக கண்டித்து கொண்டே இருக்கிறது., உடனடியாக பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அதே போல் இன்சூரன்ஸ் அமைத்து கொடுத்து, அதன் மூலம் உரிய நிவாரணம் கிடைக்க எந்த பாரபட்சமும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை முழுவதும் ஒவ்வொரு மழையிலும் கஷ்டப்படுவதற்கு காரணம், அடிப்படை தேவைகளில் இந்த அரசு கவணம் செலுத்தாதது தான் காரணம்., மழைநீர் வடிகால் பணிகள் 95% முடிந்து விடுவதாக கூறுகிறார்கள், ஆனால் நீரை சேமித்து வைக்கும் ஏரிகளில் கவணம் செலுத்துவது இல்லை என்பது குற்றச்சாட்டு., வேளச்சேரி ஏரியில் 15 ஆண்டுகளாக தூர்வாரும் பணி நடைபெறவில்லை., கடந்த 2023 ல் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னும் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளச்சேரி ஏரி தூர்வாரப்படவில்லை., 70% வேளச்சேரி ஏரியில் படர்தாமரை பூத்து அங்கு இருக்கும் நீரை தேக்க விடாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை செய்யாமல் மழை வரும் காலங்களில் இரண்டு மூன்று செயல்களை செய்துவிட்டு நாங்கள் மிக சிறப்பான முன்னேற்பாடுகளை செய்துவிட்டோம் என திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்பது எங்களது குற்றச்சாட்டு.
மிக நிச்சயமாக வரும் தேர்தலில் சென்னை மக்களே திமுகவிற்கு பாடத்தை புகட்ட தயாராக இருக்கிறார்கள்., கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 15 செண்டி மீட்டர் மழை பெய்தாலும் எந்த பாதிப்பும் வராது என்று ஆனால் இன்று 6 செண்டிமீட்டர் மழைக்கே சென்னையே மூழ்கி இருக்கிறது, திமுக அரசு சொல்வதில் எதிலும் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.
1980 களிலேயே நீதிமன்றங்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என உத்தரவு வழங்கியுள்ளது., 80 க்கு பின் இரண்டு ஆண்டுகளில் தான் தீபம் ஏற்றப்பட்டுள்ளது., அதற்கு இந்து அறநிலைத்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது., சிறுபான்மையினர் கொடுக்கின்ற அழுத்தம் தான் காரணம் என்பது நேரடி குற்றச்சாட்டு.,
நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதை செயல்படுத்தாமல் மேல்முறையீடு செய்வோம் என்பது இந்துக்களை முட்டாள் ஆக்கும் செயல்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சு.வெங்கடேசன், கார்த்திகை தீபத்தை களவர தீபம் என்று சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கிறோம்.
இதை சொல்வதற்கு சு.வெங்கடேசனுக்கு எந்த உரிமையும், தகுதியும் கிடையாது., இந்துக்கள் புனிதமாக கருதும் கார்த்திகை தீபத்தை களவர தீபம் என்று சொன்னதற்கு உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இது போன்ற செயல்களால் உரங்கி கொண்டிருக்கும் இந்துக்களை விழிப்படைய செய்து பாஜக கால் ஊன்ற சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையோடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், அறவழியில், நீதியின் வழியில் தொடர்ந்து போராடி இந்து முன்னணியும், பாஜகவும் மீட்டுக் கொடுக்கும் என்ற வாக்குறுதியை இந்துக்களுக்கு கொடுத்து கொள்கிறேன்.,
கூட்டணி வழு பெறும், திமுக அரசை வீழ்த்துவதற்கு திமுகவின் எதிர் நிலையில் இருக்கிற கட்சிகள் ஒன்று சேருவார்கள், தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலம் உள்ளது, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள அனைத்து கட்சிகளும் அதை செய்து காட்ட கூடிய வலிமை இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
2024 தேர்தலில் பாரத பிரதமரை ஏற்று எங்களது கூட்டணியில் பயணித்தவர் தான் ஒபிஎஸ்., நல்ல முடிவு எடுப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது., அது குறித்து அவர் கூறுகின்ற வரை எந்த கருத்தும் இல்லை.
செங்கோட்டையன் எடுத்தது தனிப்பட்ட முடிவு, அவர் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்., என பேட்டியளித்தார்.








