• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

ByP.Thangapandi

Nov 30, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட சந்தைப்பட்டி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சந்தனமாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகள், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது தொடர்ந்து மங்கள இசை முழங்க கடம் புறப்பாடாகி சந்தன மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.