• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

மழலையர் பள்ளியின் விளையாட்டு விழா..,

BySeenu

Nov 29, 2025

கோவை சுகுணா இண்டர்நேஷனல் ஸ்கூல் சிஸ் மழலையர் பள்ளியின் விளையாட்டு விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது*

சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் இராஜாமணி அம்மாள், சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமிநாராயணசுவாமி,சுகுணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுகுணா லட்சுமிநாராயணசுவாமி,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், இணை நிர்வாக இயக்குநர் அனீஸ் குமார், சிஸ் ஆரம்பக் குழந்தை பராமரிப்பு பள்ளியின் இயக்குநர் சாந்தினி அனீஸ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துப்பாக்கி சுடுதல் சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற .மகேஷ் பசுபதி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்..

முன்னதாக மழலையர் பள்ளி குழந்தைகளின் அணிவகுப்பு நடைபெற்றது..

இதில் ஒலிம்பிக் கொடியை ஏந்தியபடி மழலை குழந்தைகள் அணிவகுப்பு நடத்தி அசத்தினர்..

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் எல்.கே.ஜி.மற்றும் யூ.கே.ஜி.பயிலும் மழலை குழந்தைகள் பல்வேறு விதமான போட்டிகள்,ஆடல்,பாடல்,விளையாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்..

வண்ண ஆடைகள் அணிந்து மழலை குழந்தைகள் நடத்திய நிகழ்ச்சிகளை மேடையில் அமர்ந்திருந்த விருந்தினர்கள்,பார்வையாளர்கள் அரங்கில் இருந்த பெற்றோர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ரசித்து கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்..

தொடர்ந்து போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பங்கேற்ற மழலை குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..

விழாவில் சுகுணா ராக் வி பள்ளி முதல்வர் அந்தோணி ராஜ், சுகுணா சர்வதேசப் பள்ளியின் முதல்வர் தபத்மாவதி பஞ்சாபகேஷன், சிஸ் மழலையர் பள்ளியின் பொறுப்பாளர் இலட்சுமி ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..