அரியலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழா, தொமுச பேரவை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. .முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச சார்பில் சாந்தம் முதியோர் இல்லத்திலுள்ள ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி இனிப்புடன் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச செயலாளர் பி வி அன்பழகன் தலைமை தாங்கினார். தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் மகேந்திரன், தொமுசநிர்வாகிகளோடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிற்றுண்டி, வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த விழாவில் மாவட்ட திமுக துணை செயலாளர் லதா பாலு, தொமுச பேரவை கொடியினை ஏற்றி வைத்து , அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் இரா. முருகேசன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச செயலாளர் பி வி அன்பழகன் வரவேற்றார். இந்நிகழ்வில் அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தலைவர் எம் கனகராஜ் பொருளாளர் பி சித்திரவேல் துணைத்தலைவர் எம் சிவக்குமார், துணைச் செயலாளர் எம். சுவாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், கம்பர், தன்ராஜ், ஆசைத்தம்பி, ரமேஷ்குமார், நடராஜன், வில்வேந்திரன், ஹபீப்ரகுமான், செந்தில்குமார், திருஞானசம்பந்தம், நடராஜ் , கண்ணன், மருதமுத்து, மைனர், உள்ளிட்ட தொமுச நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அரியலூர் ஸ்ரீ கோதண்ட ராமர் பெருமாள் கோவிலில் , அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரில், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, 100க்கு மேற்பட்டோருக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தொமுச நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந் நிகழ்வின் முடிவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அரியலூர் கிளை தொமுச பேரவை செயலாளர் பி வி அன்பழகன் நன்றி கூறினார்.








