தூத்துக்குடி மாவட்டம் இளைய சேரனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வின் பீட்டர் (வயது40) விவசாயத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிபாறை அருகே உள்ள கொடப்பாறை கிராமத்தில் தோட்டத்தில் விவசாய பணிகளை வழக்கம் போல் செய்து முடித்துவிட்டு நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் இளைய சேரனந்தலுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சிப்பிப்பாறை அருகே உள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.








