சென்னை தனியார் ஓட்டலில் மூக்கியல் என்ற மூக்கு, தொண்டை, காது மருத்துவத்தின் நோய்கள் பற்றி அறியும் அறிவியல் மருத்துவ கலந்தாய்வு, முதுநிலை மருத்துவர்களுக்கான பயிலக நிகழ்ச்சிகள் வருகின்ற நவம்பர் 28, 29, 30 தேதிகளில் முன்று நாட்கள் மாநாடு பிரபல லீ ராயல் மெரிடியன் தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது.

இது குறித்து இந்த மாநாட்டின் தலைவர் டாக்டர் அகிலசாமி, பொருளாளர் டாக்டர் ரஜிகாந்த் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் இந்த மாநாட்டில் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், டாக்டர் அஜய்ஜெயின், மாநாட்டு புரவலர் பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு மூக்கியல், முதல் ஓவ்வாமை வரையிலான பல நோய்கள் பற்றி அறிவியல் தெளிவுகளும், புதிய மருத்துவ பயன்பாடுகள் குறித்து. நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்தும் விவாதிக்கபடும். எனவும்

இந்த மாநாட்டின் போது 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மருத்துவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் மூக்கு, காது, தொண்டை உள்ளிட்டவைகளின் பல்வேறு ஒவ்வாமைகளும், பலநோய்களை பற்றிய அறிவியல் தெளிவுகளும் பதிய மருத்துவ பயன்பாடுகளும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.








