விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளிவாசலுக்கு வந்த 23 வயது இளம் பெண்ணை, அதே பள்ளிவாசலில் ஊழியராக பணியாற்றும் அப்துல் அஜீஸ் (29) பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து அப்துல் அஜீஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடமான பள்ளிவாசலை, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்து தடயங்களை அழிக்க முயற்சித்ததாக புகார் எழுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, போராட்டமாக பேரணியாக சென்ற அவர்கள், பள்ளிவாசல் முன் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.








