தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் கடலோர கிராமங்களில் சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமம் மற்றும் கடற்கரையில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக 11 வது நாளாக காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









