மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும், எருமார்பட்டி, உத்தப்பநாயக்கணூர் பகுதி என மூன்று மின் மாற்றிகளை மாற்றியமைக்க உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகம் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரை கோரிக்கை வைத்ததாகவும்., அதில் எருமார்பட்டி மின் மாற்றியை மட்டும் சலுகை அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும்., ஆனால் எம்எல்ஏ அலுவலகம் முன்பு மற்றும் உத்தப்பநாயக்கணூர் பகுதியில் உள்ள மின்மாற்றியை மாற்றியமைக்க பணம் கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.,

இதனை கண்டித்து ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
இந்த ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்களில் அதிமுக ஒருங்கிணைப்பு, மீட்பு குழு என ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிக்கலா மற்றும் தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன் புகைப்படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.,

தவெக வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கும், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு., அவர் இணைந்தது குறித்து தற்போது பதில் ஏதும் இல்லை என்றும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஒரே அணியில் பயணித்த போது அடிக்கப்பட்ட பேனர்கள் எனவும், உண்ணாவிரத போராட்டத்தில் இருப்பதால் உண்ணாவிரத போராட்டம் முடிந்த பின் அண்ணன் ஓபிஎஸ் இடம் ஆலோசனை செய்து பதில் அளிப்போம் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டியளித்தார்.,








