உசிலம்பட்டியில் மேதகு பிரபாகரனின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை வழங்கியும், இனிப்பு வழங்கியும் நிர்வாகிகள் கொண்டாடினர்.,

தமிழ்ஈழ போராளியும், விடுதலை புலிகள் இயக்கத் தலைவருமான மேதகு வே.பிரபாகரனின் 71வது பிறந்த தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பல்வேறு வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி சார்பில் மேதகு பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழி எடுக்கப்பட்டது., தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.,

மேலும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குருதி கொடை வழங்கினர்., அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்று மற்றும் கேடயங்களை வழங்கி மருத்தவமனை நிர்வாகத்தினர் மற்றும் செவிலியர் ஊக்கப்படுத்தினர்.,








