சென்னை, மந்தைவெளியில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தில், புதிய மெட்ரோ நிலையம், நவீனமயமான பேருந்து நிலையம் மற்றும் இரண்டு வணிக வளாகங்கள் கட்டிடத் திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மந்தைவெளி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மந்தைவெளி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டதால், அடிப்படை வசதிகள் இன்றி அங்கு பணிபுரியும் பெருநகரப் போக்குவரத்துக் கழக (எம்டிசி) ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தங்குமிடம், குடிநீர், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லாத காரணத்தால் பணியாளர்கள் தினமும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக எம்டிசி நிர்வாக இயக்குனர் டி. பிரபு சங்கரைத் தொடர்பு கொண்டபோது, “இந்த ஏற்பாடு தற்காலிகமானது மட்டுமே. மந்தைவெளி வளாகத்தில் கழிப்பறைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக இடங்களில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து கோரிக்கை வந்தால், தேவையான வசதிகளை நிச்சயமாக வழங்குவோம்,” என்று தெரிவித்துள்ளார்.








