• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் வில்வித்தை பயிற்சியாளர் போக்குவரின் கைது !!!

BySeenu

Nov 24, 2025

கோவை அடுத்த வடவள்ளி – சிறுவாணி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் வில் வித்தை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் 13 வயது சிறுமி வில் வித்தை பயிற்சிக்குச் சென்றார்.

சிறுமியிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்று உள்ளது. ஆனால் அச்சம் காரணமாக சிறுமி யாரிடமும் புகார் செய்யவில்லை, இந்நிலையில் அந்த சிறுமி தற்போது சென்னையில் நடந்த வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டார். அங்கு கிஷோர் குமாரை பார்த்ததும், பாலியல் துன்புறுத்தல்கள் நினைவுக்கு வந்ததால் சிறுமி கூச்சல் போட்டபடி திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து மயக்கம் தெளிந்த சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். உடனே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கிஷோர் குமாரை கைது செய்தனர். வில் வித்தை பயிற்சியாளர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.