மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு எஸ்.பி.சுப்பிரமணி நகர் பகுதியில் 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.,

இந்த பகுதிக்கு செல்லும் பிரதான சாலையின் நடுவே அமைந்துள்ள மின் கம்பத்தினால் அந்த சாலை வழியாக கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.,
வாகனங்கள் இந்த மின் கம்பத்தை உரசியவாரே செல்வதாலும், மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதாலும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனே பயணிக்கும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.,

மேலும் இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்துக் கொடுக்க முடியாத நிலை நீடித்து வருவதாகவும், மழை காலங்களில் பெரும் சிரமத்துடனே பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.,
விபத்து ஏதும் ஏற்படும் முன் சாலையின் நடுவே அமைந்துள்ள மின் கம்பத்தை மின்வாரிய அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,








