• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் கொண்டாட்டம்..,

உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் நேற்று மாலையில் (21.11.2025) கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மீனவர் தின விழா நாகர்கோவில் அஇதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவரணி செயலாளர்.ஆன்றோபோவ் தலைமையில் நடைபெற்றது,

இதில் கழக அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திருமிகு Thalavai Sundaram அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வெட்டி மீனவர் தின விழாவை கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே பள்ளம் அன்னை நகர் பகுதியைச் சார்ந்த திருமதிபெலின்டா என்பவரது மகன் கிருபாகரன் கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்தபோது கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி படகிலிருந்து தவறி விழுந்து கடலில் இறந்து போனார். இதை அடுத்து தனக்கு உதவி செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்திடம் திருமதி_பெலிண்டா

கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் உலக மீனவர் தின விழாவான இன்று அவருக்கு தனது சொந்த நிதியாக ஒரு லட்ச ரூபாய் அவர் வழங்கினார்.

மேலும் இந்த உலக மீனவர் தினம் விழாவில் கழக பொதுச் செயலாளர்

எடப்பாடியார் அவர்களை மீண்டும் முதலமைச்சர் ஆக்க வேண்டும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்ற ஏழு அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,இதில் முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்புச் செயலாளருமான K_T_பச்சைமால் அவர்கள் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.