ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பணி அமர்வு மையத்தின் சார்பாக வங்கித் தேர்வு பயிற்சிக்கான தொடக்க விழர் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் தலைமை உரை ஆற்றினார். அவர்தம் உரையில் மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் அரசு மற்றும் வங்கிப் பணியாளர்களுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற திட்டமிடப்பட்ட உழைப்பும் சரியான வழிகாட்டுதலும் தேவையானவை . குறிப்பாக IBPS, SBI, RBI ஆகிய வங்கித் தேர்வுகளில் வெற்றி பெருக்கமான கணிதம், ஆங்கிலம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய அனைத்திலும் மாணவர்கள் உறுதியாக அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த மைபத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் நாள் முடியும்… தாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்டால் எதிர்காலத்தில் வங்கி அலுவர்களாக உயர்ந்து நிற்பீர்கள் என்றுகூறினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்தி பேசினார் .
அதனைத் தொடர்ந்து கல்லூரி செயலர் த.அபா.செல்வராஜன் வங்கித் தேர்விற்கான பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். சென்னை வெரேண்டா ரேஸ் அகாடமி மணி பேசியது ஒழுக்கம், முயற்சி, நம்பிக்கை, ஆகிய மூன்றும் இருந்தால் வெற்றி என்பது தூரத்தில் இல்லை. என கூறினார்.

முன்னதாக பணியமர்வு மைய ஒருங்கிணைப்பாளர் மகேசன். மற்றும் 86 மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர்.








