• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள காவல்துறையினருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள 46 காவல்துறையினருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் இ.கா.ப தலைமையில் நடைபெற்றது.
இதில் மேற்படி‌ காவல்துறையினருக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மற்றும் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மாறுதல் வழங்கி உத்தரவிட்டார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி கண்காணிப்பாளர்கள் உட்பட அமைச்சு பணி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.