மதுரையில் உள்ள விஐபிகள் குடியிருக்க கூடிய ஒரு பகுதியாக உள்ளது தான் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துரைச்சாமி நகர்

பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளும் அரசு அலுவலர்களும் குடியிருக்க கூடிய ஒரு பகுதியாக இருந்து வரக்கூடிய இந்த துரைசாமி நகர் பகுதியில் உள்ள பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை நள்ளிரவு ஒரு மணி அளவில் வந்த மர்ம நபர்கள் பக்கவாட்டில் இருந்த இரண்டு சக்கரங்களையும் கழட்டி விட்டு அந்தப் பகுதியில் சாலை பணிக்காக போடப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்களை முட்டுக் கொடுத்தது தெரிய வந்தது.
அதேபோன்று துரைசாமி நகர் விரிவாக்க பகுதியாக உள்ள சதாசிவம் நகர் பகுதியில் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இருக்கக்கூடிய நம்பர் பிளேட்டுகளை திருடியதோடு மட்டுமல்லாது.

அங்கிருந்து 50 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு நான்கு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு பக்க இரண்டு சக்கரங்களையும் கழட்டி விட்டு செங்கற்களை முட்டுக்கொடுத்து சென்று உள்ளனர்.
புகாரின் அடிப்படையில் எஸ் எஸ் காலனி காவல்துறையினர் துரைச்சாமி நகர் பூங்கா பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மர்ம நபர்கள் புதிய இடத்தை கையாண்டு சக்கரங்களை திருடிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தினாலும் நம்பர் பிளேட்டுகளை திருடிச் செல்ல வேண்டியது நோக்கம்தான் என்ன என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








