• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாலை விபத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Nov 21, 2025

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி இருசக்கர வாகனத்தில் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சாலையில் கிடந்துள்ளனர்.

அப்போது விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே .டி .ராஜேந்திர பாலாஜி உடனடியாக தனது காரை நிறுத்தி காயமடைந்த இருவரையும் மீட்டு தனது ஆதரவாளரின் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் இருவரையும் அம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சாலை விபத்தில் சிக்கிய தம்பதியினரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சற்றும் தயங்காமல் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது