தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள இளையரசனேந்தல் குறுவட்டப் பகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்த போதிலும் ஊராக வளர்ச்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது. தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு நெல்லை மாவட்டத்துடன் இருந்து வந்தது. 01.09.2017ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊராக வளர்ச்சி துறை தென்காசி மாவட்டத்துடன் தொடரும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கிடையில் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்ய கோரி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயண சுவாமி, தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் ஆகியோர் தலைமையான பெஞ்ச் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமென்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர். இந்த நிலையில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இளையரசன்ந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
இதனால் 20ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் 12 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.







; ?>)
; ?>)
; ?>)
