தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏழு பகுதிகளில் எஸ்ஐஆர் பணிகளுக்காக வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு, 2002 சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயரை கண்டறிவதற்கு, உதவி செய்ய தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றிலும், புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய ஏழு பகுதிகளில்,வாக்காளர் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள், மேற்படி வாக்காளர் சேவை மையங்களை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொண்டு, சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான சந்தேகங்களை சரிசெய்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது”.






; ?>)
; ?>)
; ?>)
