காரைக்கால் நகர பகுதியில் நூல் கடைவீதியில் குதிரை ஒன்று வீட்டு வாசலில் படிக்கட்டு அடி செல்லும் கழிவு நீர் சாலவத்தில் உணவுக்காக தலை அடியில் விட்ட போது சிக்கி மாட்டிக்கொண்டது.

இதனால் கழிவு நீர் சாலவம் அடியில் தலையும் வயிற்றுப் பகுதியில் பலமாக சிக்கி காயங்களுடன் உயிருக்கு போராடியது. அருகில் இருந்தவர்கள் அதனை மீட்க முயன்ற போது காலால் எட்டி உதைத்து மிரண்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் குதிரையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடிய நிலையிலும் குதிரை மிரண்டு அச்சத்துடனே காணப்பட்டது.

பின்னர் குதிரையின் கால்களில் கயிறுகளை கட்டி இழுத்து மீட்டனர். கழிவு சாலவத்தில் இருந்த போது மிரண்டு காலில் உதைத்த குதிரை மீட்கப்பட்ட பின் மிரளாமல் எழுந்து சென்றதை அப்பகுதிவாசிகள் ஆச்சரியத்துடன் கண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)