கூட்டத்தில் மாநில மமக துணை பொதுச் செயலாளர் M. யாக்கூப் MC, மாவட்ட பொருளாளர் M. சபிதுல்லா, பல நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

பல்லாவரத்தில் மக்கள் தொடர்பு பணிகளை வலுப்படுத்துவது, கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைப்பது மற்றும் வரவிருக்கும் அரசியல் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில்—1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வணக்க வழிபாடு உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் எனவும் , இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய sir வாக்காளர் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது முக்கியமானவை.

இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி R.M. அனிபா செய்தியாளர்களை சந்தித்து,
கடந்த 25 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுவிக்க மாநில அரசு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இது சாத்தியமானது என்றும், மனிதநேய அடிப்படையில் உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.






; ?>)
; ?>)
; ?>)
