• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..,

ByT. Balasubramaniyam

Nov 18, 2025

அரியலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அருகே, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகி கள் துரை .க . சுந்தரமூர்த்தி ,ஒ.கருணாநிதி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், வருவாய் த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன்,எம் ஆர் பி செவிலியர் சங்க மாவட்ட நிர்வாகி இராகவன்,தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம்பேத்கர், மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட நிர்வாகி வசந்தா,ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகாலிங்கம், உள்ளிட்டார் முன்னிலை வகித்தனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் வழங்கிட வேண்டும்,

படித்த இளைஞர்க ளுக்கு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30% இடங்களை உடனடியாக நிரப்பிடவேண்டும், இடைநிலை, முதுகலை, உயர்நிலை மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை, தமிழக அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி , அரியலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ போராட்டக் குழு நிர்வாகிகள் வேல்மணி, கல்ராஜுலு, செல்வகுமார் ,மாயவன், சி . இராதாகிருஷ்ணன், கி. திரவியராஜ்,செல்வகுமார் உள்ளிட்டோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.