ஜே.கே. டையர் மற்றும் ட்ரிஃப்ட் வுல்ஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சொல்யூஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டின் கோயம்புத்தூர் விழாவுக்கு ஒரு புதிய த்ரில் அனுபவத்தை சேர்க்கிறது.
சாலை பாதுகாப்பு குறித்து வலியுறுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கோயம்புத்தூர் விழாவின் இளைஞர் மற்றும் சமூக முன்முயற்சிகளின் முக்கிய அங்கமாக, “பெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு” சாலை பாதுகாப்பு மற்றும் பொறுப்பான ஓட்டுநர் பழக்கங்களை வலியுறுத்துகிறது.
இத்தகைய ஸ்டண்ட்களை பொதுச்சாலைகளில் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது என்பதையும், சரியாக ஓட்டுதல், பாதுகாப்பு உபகரணங்கள் அணிதல், மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல் போன்றவற்றின் அவசியத்தையும் இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.
பாதுகாப்பான ஓட்டுநர் பண்பாட்டை ஊக்குவிப்பதில் யங் இந்தியன்ஸ் தொடர்ந்து காட்டி வரும் அர்ப்பணிப்புடன் இணைந்துள்ளது.

உலகத் தரம் வாய்ந்த அனுபவங்களை நகரத்திற்கு கொண்டு வருவது கோயம்புத்தூர் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும். அதன் அருகில், “பெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு” கொடிசியா சாலையை இயக்கம், துல்லியம், மற்றும் திறமையால் நிரம்பிய ஒரு மேடையாக மாற்றுகிறது. இதில் டிரிஃப்ட் ரன்கள், பர்ன்அவுட் டெமோக்கள், அதிரடி பைக் ஸ்டண்ட்கள், திடீர் திசை மாற்றங்கள், மற்றும் கோரியோகிராஃபி செய்யப்பட்ட ஸ்டண்ட் தொடர்கள் இடம் பெற்றன.
மேலும்
உலகளாவிய ஸ்டண்ட் ஃபெஸ்டிவல்களின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வில், roaring engines, டயர் புகை, நெருக்கமான டிரைவிங் சீக்வன்ஸ் போன்றவை பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.






; ?>)
; ?>)
; ?>)
