• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பசுபதீஸ்வரர் கோயிலில் உண்டியல் திருட்டு..,

ByM.I.MOHAMMED FAROOK

Nov 17, 2025

திருப்பட்டினம் பகுதி பசுபதீஸ்வரர் கோயிலில் கடந்த அக். 28-ஆம் தேதி இரவு உண்டியல் திருடுபோனது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உண்டியலில் சுமார் ரூ. 15 ஆயிரம் ரொக்கம், ரூ.9,500 மதிப்புள்ள உண்டியல் திருடுபோனதாக தெரிவித்திருந்தனர்.

காவல் ஆய்வாளர் மரிய கிறிஸ்டின்பால், உதவி ஆய்வாளர் எம். முருகன் ஆகியோர் கோயிலுக்குச் சென்று பார்வையிட்டு, கைரேகை நிபுணர் மூலம் பதிவுகளை சேகரித்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்தனர். தனிப்படை அமைத் குற்றவாளிகளை தேடிவந்தனர்

இந்த நிலையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த ராகேஷ், முரளி ஆகியோரை கடந்த 8-ஆம் தேதி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கில் தொடர்புடையதை ஒப்புக்கொண்ட அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அதே பகுதியைச் ேசர்ந்த இளையராஜா, முரளிதரன், முஷரப் ஆகிய மூவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து உண்டியல் மற்றும் ரூ. 12,450 ரொக்கம், 3 மோட்டார் சைக்கிள், 4 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.