அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், திருமானூர் ஒன்றியம்,குந்தபுரம் கிராமத்தில் , சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் பகுதி நேர நூலகத்திற்கு ,புதிய கட்டிடம் அமைத்து, அதனை ஊர் புற நூலகமாகவும் மாற்றி தர கோரி , அரியலூர் கலெக்டரிடம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை எஸ் ஆர் பாலாஜி, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அம்மனுவில், அவர் தெரிவித்துள்ளதாவது,திருமானூர் ஒன்றியம் ஒன்றியம் குந்தபுரம் கிராமத்திலுள்ள பகுதி நூலகம் (2018 முதல்) கிராமத்திற்கு சொந்தமான சாவடி கட்டிடத்தில் இயங்க வந்தது. ஏறத்தாழ 1900 புத்தகங்களுடன் இயங்கி வரும் அந்த நூலகத்தினை குந்தபுரம் கிராமம் மட்டும் அல்லாமல்,அதனை சுற்றி இருக்கும் தட்டஞ்சாவடி ,கரைவெட்டி,பரதூர்,சேனாபதி, வேட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின்,பள்ளி, மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு நடத்தும் போட்டித் தேர்வு எழுதுபவர்கள் உதவியாக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது அந்த நூலக கட்டிடம் மிகவும் சிதலமடைந்து,மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் இல்லை. ஆதலால் தற்பொழுது அந் நூலகம், குந்தபுரம் பகுதி நேர நூலகத்தின் நூலகர் வீட்டு மாடியில் ,தற்காலிகமாக இயங்கி வருகிறது.மேலும், அப்பகுதியில் வசிக்கும் போட்டி அரசு தேர்வு எழுதுபவர்கள், திருமானூரிலுள்ள நூலகத்திற்கு சென்றுவர சிரமமாக உள்ளது.

எனவே ஐயா அவர்கள் அருள் கூர்ந்து,பகுதிநேர நூலகத் திற்கு புதிய கட்டிடம் அமைத்து தந்து அதனை ஊர் புற நூலகமாக மாற்றி அமைத்து தர திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு விடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை எஸ் ஆர் பாலாஜி அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)