• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் கே. டி. ஆர் பேச்சு..,

ByRadhakrishnan Thangaraj

Nov 15, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் BLA 2 பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து சிறப்புரையாற்றினார்

பீகாரில் NDA கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது . காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்- நாட்டுக்கும் ஊருக்கும காங்கிரஸ் கட்சி ஆகாது.காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டிக் கொடுக்கிறது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

மேலும் வீணாப்போன காங்கிரஸை திமுக தான் தூக்கி பிடித்திருக்கிறார்கள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டி விட்டால் காங்கிரஸ் காணாமல் போய்விடும்

பீகார் தேர்தல் முடிவுதான் தமிழகத்தில் நிலவும். 220 ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர்வார் நமது வெற்றி தூரத்தில் இல்லை மிக அருகில் உள்ளது.

திமுக தோல்வி முகத்தோடு கோட்டையை விட்டு வெளியேறும் காலம் வந்து விட்டது. . அதிமுக வெற்றி முகத்தோடு கோட்டையை நோக்கி செல்லும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உங்களது உழைப்பை வீணாக்க மாட்டேன்.

இராஜபாளையம் தொகுதி நமது அடையாளம் அதிமுக இரட்டை இலை தான் இராஜபாளையத்தில் போட்டியிடும். எனக்கு சிவகாசி ஒரு கண் என்றால் இராஜபாளையம் மற்றொரு கண்.

இராஜபாளையம் தொகுதியில் வெற்றியை விட்டாலும் மக்கள் மனதில் நாம் இருக்கின்றோம். கூட்டணிக்கு என்று பல தொகுதிகள் உள்ளது. மாவட்டத்தில் 7 தொகுதியிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.

திமுக விளம்பரம் தான் செய்கிறது. விளம்பத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது. ஒலிம்பிக் ஜோதியை பிடித்து ஓடுகின்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நாம் பக்க பலமாக இருக்க வேண்டும்.. அதிமுக பாஜக கூட்டணி வலுவலான கூட்டணி – திமுக கூட்டணி குழப்பமான கூட்டணி – திமுக கூட்டணியில் உள்ள 10 கட்சியும் பல கருத்துக்கள் கொண்டவை. ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள்.

எடப்பாடியார் ஏழைகளை , உழைப்பாளிகளை நேசித்தார். அவரை நாம் தூக்கி வேண்டும் என சிறப்புரையாற்றினார்

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நான் சென்று வரும் போது கோயிலில் உள்ளவர்கள் அடுத்து எடப்பாடியார் ஆட்சி வர வேண்டும் என கூறுகிறார்கள். திமுக ஒரு குடும்பத்திற்கானது என பழிச்சொல் விழுந்து விட்டது. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் ஜான் மகேந்திரன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் அகில உலக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ் என் பாபுராஜ் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் அழகு ராணி ராஜபாளையம் நகர வடக்கு கழகச் செயலாளர் வக்கீல் துறை முருகேசன் தெற்கு கழக செயலாளர் எஸ் ஆர் பரமசிவம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அழகாபுரியான் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விருதுநகர் மண்டல இணைச் செயலாளர் சங்கர் ராமன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் குருசாமி ஏராளமான கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.