தூத்துக்குடியில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளி இவரது மனைவி ராதா மகேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு ஆதிரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. இவரது எதிர் வீட்டில் வசித்து வரும் ஜெகன் என்பவரின் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு ராதா மகேஸ்வரி தனது மகள் ஆதிராவை தூக்கி சென்றாராம்.

மதியம் ஒரு மணி அளவில் நடு வீட்டில் அமர்ந்து தனது குழந்தையை மடியில் வைத்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அனைவரும் அலறியடித்து ஓடினர். அப்போது, ராதா மகேஸ்வரி தனது குழந்தையுடன் எழுந்திருக்க முடியாமல் சிக்கிக்கொண்டார். இதில் கான்கிரீட் விழுந்ததில் அவரது குழந்தை ஆதிரா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது. ராதா மகேஸ்வரி தலை மற்றும் உடல்பழுத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.”
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை எடுப்பாரா? எனவும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!











; ?>)
; ?>)
; ?>)