விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கிழக்கு, மேற்கு, ஒன்றியம் சார்பில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஏழாயிரம்பண்ணையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார் , சாத்தூர் ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ் முன்னிலை வகித்தார், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியது
வாக்காளர் புதுப்பிக்கும் பட்டியலில் விண்ணப்பங்கள் கொடுத்தால் தான் பெயர்கள் சேர்க்கப்பட்டு ஓட்டுரிமை வழங்கப்படும் தற்போது வரை அமைச்சர் ஆன எனக்கே ஓட்டுரிமை கிடையாது. ஆகையால் வாக்காளர் புதுப்பிப்பு விண்ணப்பங்களை உடனுக்குடன் நிரப்பி அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். திமுக கட்சி நிர்வாகிகள் ஓட்டுக்கள் விடுபடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். திமுகாவுக்கு என்று கூட்டணி ஓட்டுகள் உட்பட 50% ஓட்டுகள் உள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் சேதாரம் இல்லாமல் வலுவாக உள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்றது கிடையாது.

ஆனால் இந்த முறை இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று வரலாற்று சாதனை நிகழ்த்துவார்.
இதன் மூலம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியில் இருக்கும். திமுக தலைமை வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 10 இடத்தில் ஆவது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறது. ஆனால் அதிமுகவில் இருந்த தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவை முழுமையாக தோற்கடிக்க தயாராகிவிட்டனர். அதிமுக கூட்டணியில் விஜய் சேர்வார் என எடப்பாடி எதிர்பார்த்து ஏமாந்து விட்டார்.
அதனால் இந்த தேர்தலில் நமது வெற்றி மிகவும் சுலபமாகிவிட்டது என கூறினார்.











; ?>)
; ?>)
; ?>)