செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கீரப்பாக்கம் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள், தமிழக முதல்வர் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று இரவு மேளதாளத்துடன் மாபெரும் கையெழுத்து பிரச்சாரம் நடத்தினர்.

சாலை, கால்வாய், ரேஷன் கடை, விளையாட்டு திடல், சமுதாய நலக்கூடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், சாலைகள் குண்டும் குழியுமாகி விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் பெருகி, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல நோய்களுக்கு ஆளாகி வருவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், 10 ஆண்டுகளாக பாழடைந்த பொது கழிப்பறையை அகற்றி ரேஷன் கடை அமைக்க, விளையாட்டு திடலை சீரமைக்கவும், அறிவுசார் மையம் உருவாக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
இக்கையெழுத்து பிரச்சாரத்தை 4-வது வார்டு உறுப்பினர் சசிகலா தனசேகரன் தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் வீடு வீடாக சென்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.











; ?>)
; ?>)
; ?>)