• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு பேரணி..,

ByKalamegam Viswanathan

Nov 12, 2025

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மை பாரத் அமைப்பு சார்பாக மதுரை திருநகரிலிருந்து – திருப்பரங்குன்றம்
வரை பேரணி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் ராம சீனிவாசன் கூறுகையில்:

நாடு முழுவதும் இரண்டு 150வது விழா கொண்டாடப்படுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் என்ற ஒரு மிகப்பெரிய ஒரு தேசிய ஆளுமை அவருக்கு 150வது ஆண்டு விழா இன்னொன்று ஒரு நிகழ்வு அதனுடைய 150வது ஆண்டு விழா. வந்தே மாதரம் முழக்கம் முதன்முதலாக வந்தே மாதரம் பாடல் வெளியிட்ட ஆண்டு 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஒரு பாடலுக்கும் 150 ஆம் ஆண்டு விழா, ஒரு தலைவருக்கும் 150 ஆம் ஆண்டு விழா. இந்த இரண்டையும் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக சர்தார் பட்டேல் 150 தமிழ்நாட்டில் நாடு முழுக்க மை பாரத் அதனுடைய தமிழக இயக்குனர் அவர்கள் இருக்கின்றார்கள். அந்த மை பாரத இயக்கமும் சமூக தொண்டு நிறுவனங்களும் கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் ஆக சேர்ந்து சர்தார் 150 ஆண்டு விழாவுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு ஒற்றுமை யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை மை பாரத் சார்பாக 18 யாத்திரைகளை முடித்து விட்டார்கள். இன்று மதுரையில் 19ஆவது யாத்திரை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் தேசபக்தியோடு தேச ஒற்றுமை பற்றி உரை இருக்கிறது.

பட்டேல் அவர்களை நாம் சொல்லி தான் தமிழக மக்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நாடு பல்வேறு சமஸ்தானலாக இருந்து ஒற்றுமை பெற்று ஒரே பாரதமாக வருவதற்கு குறிப்பாக ஐதராபாத் நிஜாம் மாதிரி முரண்டு செய்து கொண்டிருந்த பிடிவாதமாக இருந்த தேச விரோதமாக செயல்பட்ட ஹைதராபாத் நிஜம் மாதிரி சமஸ்தானங்கள் எல்லாம் இரவோடு இரவாக இராணுவத்தை அனுப்பி இந்தியாவோடு இணைத்ததற்கு,

ஜூனகத் குஜராத் பகுதியில் இணைத்ததற்கு, குஜராத் பகுதியில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அமுல் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக வெற்றியை பெற்று இருக்குது என்றால் சர்தார் பட்டேல் தான்.

வரிசையாக படேல்யலுடைய சாதனையை பேசிக்கொண்டே போகலாம். குறிப்பாக மோடி ஐயா அவர்கள் படேல் உடைய 150வது ஆண்டு பிறந்த நாளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். இதனுடைய நிறைவு விழா டிசம்பர் ஆறாம் தேதி குஜராத்தில் உலகத்தின் மிகப்பெரிய சிலை சர்தார் பட்டேலுக்கு தான் என்ற பெருமையை அடைந்திருக்கிறார்.

அங்கே பிரதமரே வந்து கலந்து கொள்கிறார் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் பாதயாத்திரை குஜராத்தில் இருக்கிறது மதுரையில் இருந்து கூட அங்க செல்கிறார்கள் நாம் எல்லோரும் கலந்து கொள்ள கூடிய ஒரு ஒற்றுமை யாத்திரை அங்கு பிரம்மாண்டமாக நடக்கும்.

புதிய திட்டங்கள் பற்றிய கேள்விக்கு:

இப்போது நாம் மதுரையில் இருக்கின்றோம் திருப்பரங்குன்றத்தில் பக்கத்தில் AIMS மருத்துவமனை இருக்கின்றது. இன்று வரை இரண்டு லட்சம் ஸ்கொயர் பீட் கட்டி முடித்துள்ளார்கள். ஜனவரியில் முதல் கட்ட எய்ம்ஸ் இயக்கத்தில் துவங்கிவிடும். இந்தியாவிலேயே பெரிய எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் தான் உள்ளது .

நமது மாநிலத்தில் தான் உள்ளது இந்தியாவை விட டெல்லியை விட பெரிதாக தமிழ்நாட்டில் உள்ளது. மதுரை மாநகராட்சியின் பகுதி தான் இது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு 2700 கோடி ரூபாய் பணம் வாங்கி இருக்கின்றோம்.

மதுரையில் மட்டும் 47 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக மாநகராட்சியின் தகவல் மாநகராட்சி இன்னும் சில தெருக்களில் இருக்கும் நாய்களை கணக்கில் சேர்க்கவில்லை அதை சேர்த்தால் எண்ணிக்கை கூட வரும் என்று நினைக்கிறேன்.

இந்த நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கும், நாய்களுடைய இனப்பெருக்கத்தை குறைப்பதற்கு 50% நிதி மத்திய அரசு தான் கொடுக்கிறது. அதை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டியது நம் கையில் தான் உள்ளது என பேராசிரியர் சீனிவாசன் கூறினார். ஒற்றுமை பேரணிக்கான ஏற்பாடுகளை பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் செய்திருந்தார்.